Mayu / 2026 ஏப்ரல் 06 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவின் டெலாவேர் (Delaware) மாநிலத்தில் உள்ள ஹொக்கேசின் (Hockessin) பகுதியில், சுமார் 25 அடி உயரமான இந்த பிரமாண்ட ஹனுமான் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இது அமெரிக்காவிலேயே ஒரு கல்லினால் செதுக்கப்பட்ட மிக உயரமான சிலையாகக் கருதப்படுகிறது.
சுமார் 30,000 கிலோ எடையுள்ள இந்தச் சிலை, தமிழ்நாட்டில் உள்ள மகாபலிபுரத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்டு, பின்னர் கப்பல் மூலம் அமெரிக்காவிற்கு கொண்டு செல்லப்பட்டது.
வேத மந்திரங்கள் முழங்க, ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி இந்த சிலைக்கு மிகவும் கோலாகலமாக கும்பாபிஷேகம் மற்றும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான இந்தியப் பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
13 minute ago
26 minute ago
37 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
26 minute ago
37 minute ago
2 hours ago