Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 12, திங்கட்கிழமை
Freelancer / 2024 செப்டெம்பர் 22 , பி.ப. 01:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவின் அலபாமாவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. தனி நபர்கள் துப்பாக்கி வைத்திருக்க அரசு அனுமதிக்கிறது. எனினும் அதை பயன்படுத்துவதற்கும் எண்ணற்ற கட்டுப்பாடுகள் உள்ளன. 18 வயதுக்குட்பட்ட தனிநபர்கள், தண்டனை பெற்ற குற்றவாளிகள் மனநலம் குன்றியவர்கள் உள்ளிட்டோர் துப்பாக்கி வைத்திருக்க தடையும் உள்ளது.
இந்நிலையில், அமெரிக்கா, அலபாமாவின் பர்மிங்காமில் விடுதியின் வெளியே மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் நான்கு பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயமுற்றனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், துப்பாக்கி சூடு நடத்திய மர்மநபர் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
55 minute ago
1 hours ago
1 hours ago