Editorial / 2024 ஜனவரி 23 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் சிக்காகோ அருகேயுள்ள மாநிலத்தில் இரண்டு வீடுகளில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
சிக்காகோ அருகிலுள்ள இல்லினாய்ஸ் மாநிலத்தின் ஜோலியட் என்ற பகுதியில் ஒருவர் இரண்டு வீடுகளுக்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில் ஏழுபேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், துப்பாக்கிச்சூடு நடத்திய குறித்த நபர், 23 வயதான ரோமியோ நான்ஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் சிவப்பு நிற டொயோட்டா கெம்ரி காரில் தப்பியோடியுள்ளார்.
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூட்டு வன்முறைச்சம்பவம் அதிகரித்து வருகிறது. இவ்வருடத்தில் முதல் மூன்று வாரங்களில் மட்டும் துப்பாக்கிச்சூடு காரணமாக 875 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
9 hours ago
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
22 Mar 2026