Freelancer / 2024 மே 28 , பி.ப. 12:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க நடிகரான ஜோனி வெக்டர், தன் உதவியாளரை காப்பாற்ற நினைத்து முன்சென்ற நிலையில், அவரை துப்பாக்கிகள் துளைத்துவிட்டதாக வெளியான செய்தி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க நடிகரான ஜோனி வெக்டர் என்பவர் கடந்த வாரம் கார் திருடர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதில் அவரது உதவியாளர் மீதுதான் திருடர்கள் குறிவைத்துள்ளனர் என்றும், இதையறிந்த நடிகர் ஜானி, உதவியாளரை காப்பாற்ற நினைத்து முன்சென்ற நிலையில், அவரை துப்பாக்கிகள் துளைத்துவிட்டன என்றும் சொல்லப்படுகிறது.
ஊடகங்களின் தகவலின்படி நடிகர் ஜோனி வெக்டர் கடந்த 25ஆம் திகதி அதிகாலை முன்று மணிக்கு லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள விடுதி ஒன்றிலிருந்து வெளியே வந்துள்ளார். பின் தனது கார் இருக்கும் இடத்திற்கு சென்றுள்ளார். அச்சமயம் முகமூடி அணிந்த திருடர்கள் மூவர், அவரது காரின் உபகரணங்களை திருட முயன்றுள்ளனர்.
அதை தடுக்க சென்ற சமயம் திருடன் ஒருவன் ஜோனி வெக்டரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளான். அதில் காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இருப்பினும் அவர் அங்கு உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இவரின் இறப்பிற்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ‘ஜெனரல் ஹாஸ்பிடல்’ என்ற ஹொலிவுட் படத்தில் பிராண்டோ கார்பின் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்களிடத்தில் கவனம் பெற்றவர் இவர். தவிர ஸ்டேஷன் 19, வெஸ்ட்வேர்ல்ட் மற்றும் கால் ஆஃப் டூட்டி, வான்கார்ட் ஆகியவை இவரின் பெயர் சொல்லும் படங்களாக உள்ளன.
இந்நிலையில் சில அமெரிக்க ஊடகங்கள் இவரது மரணம் குறித்து வேறு சில தகவல்களை சொல்லிவருகின்றன. அதன்படி இவரின் உதவியாளர் திருடர்களுடன் போராடியுள்ளார். அச்சமயம் திருடன் ஒருவன் இவரின் உதவியாளரை சுட முயன்றுள்ளான். உதவியாளரை காப்பாற்றுவதற்காக இவர் அந்த குண்டை தனது மார்பில் வாங்கியிருக்கிறார் எனக் கூறப்படுகிறது.
இதன் உண்மைதன்மை வெளிவரும் வரை இவரின் இறப்பு குறித்தான மர்மங்கள் விலகுவது கடினமே. இந்நிலையில் இவரை சுட்டுக்கொன்ற நபர்களை பொலிஸார் தேடிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.S
24 minute ago
33 minute ago
43 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
33 minute ago
43 minute ago
2 hours ago