Freelancer / 2025 செப்டெம்பர் 04 , மு.ப. 06:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமைதி அல்லது போர் இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டிய நிலையில் தற்போது உலகம் இருக்கின்றது என இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்றதன் 80 ஆம் ஆண்டு வெற்றி விழா இராணுவ அணிவகுப்புப் பேரணியில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானுக்கு எதிரான போரில் சீனா வெற்றி பெற்றதன் 80 ஆம் ஆண்டு வெற்றி விழா தலைநகர் பீஜிங்கில் உள்ள தியானன்மென் சதுக்கத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. மிகப் பிரம்மாண்டமான முறையில் நடத்தப்பட்ட இந்த வெற்றி விழாவில், ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன், இந்தோனேஷிய ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.
2015 இற்குப் பிறகு இரண்டாவது முறையாக இத்தகைய பிரம்மாண்ட வெற்றி விழா இராணுவ அணிவகுப்புப் பேரணியை சீனா நடத்தி உள்ளது. சுமார் 70 நிமிடங்கள் நடைபெற்ற இன்றைய பேரணியில் 50,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்றனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள், அணிவகுப்புப் பேரணியில் கலந்து கொண்டனர். மேலும், இதில் 100 இற்கும் மேற்பட்ட போர் விமானங்கள், ட்ரோன்கள் உள்ளிட்ட அதிநவீன இராணுவ தளவாடங்கள் பங்கேற்றன. 80,000 அமைதிப் புறாக்களும் வண்ணவண்ண பலூன்களும் வானில் பறக்கவிடப்பட்டன.
மறைந்த சீன தலைவர் மா(வோ) சேதுங் அணிந்திருந்த உடையை அணிந்து கொண்டு வெற்றிப் பேரணியில் உரையாற்றிய ஜனாதிபதி ஜி ஜின்பிங்,
இன்று மனிதகுலம் அமைதி அல்லது போர் ஆகிய இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. அதேபோல், வெற்றியா முழுமையான இழப்பா என்ற தேர்வையும் எதிர்கொள்கிறது. சீன மக்கள் வரலாற்றின் சரியான பக்கத்தில் உறுதியாக நிற்கிறார்கள் என தெரிவித்தார்.

2 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
6 hours ago