2025 மே 17, சனிக்கிழமை

அரசர் சார்லசின் புகைப்படம் நீக்கம்

Ilango Bharathy   / 2023 பெப்ரவரி 07 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அவுஸ்திரேலிய நாணயத்தாளில் இருந்து பிரித்தானிய அரசர் 3ஆம் சார்லசின் புகைப்படத்தை நீக்கவுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

மறைந்த ராணி எலிசபெத் உருவப் படங்கள் பதித்த நாணயத்தாள்கள் அவுஸ்திரேலியாவில் புழக்கத்தில் இருந்தன. எனினும் அவரது மறைவுக்கு பின்னர், பழைய நாணயத்தாள்களில் இருந்த ராணி உருவப் படத்திற்கு பதிலாக, பிரித்தானிய அரசராக பதவியேற்ற 3ம் சார்லஸின் படங்களை இடம்பெற செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டன.

இந்நிலையில், அண்மையில் அவுஸ்திரேலியாவின் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இனிவரும் காலங்களில் தயாரிக்கப்படும் நாணயத் தாள்களில் 3ஆம் சார்லஸின் புகைப்படம் இடம்பெறாது எனவும், புதிய அவுஸ்திரேலிய டொலரானது உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட அம்சங்களை கொண்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .