Freelancer / 2025 பெப்ரவரி 19 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
அர்ஜென்டினா ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர அந்நாட்டு எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளது.
அர்ஜென்டினா ஜனாதிபதி ஜேவியர் மிலே (வயது 54) தலைமையிலான வலதுசாரி லிபர்டி அட்வான்சஸ் கூட்டணி கட்சி ஆட்சி நடைபெறுகிறது. இவர் லிப்ரா என்ற கிரிப்டோகரன்சி குறித்து எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அதில் சிறு வணிகங்கள் மற்றும் தொடக்க நிறுவனங்களுக்கு நிதியளிக்க லிப்ரா உதவும் என குறிப்பிட்டிருந்தார்.
மேலும் அதனை வாங்குவதற்கான இணைப்பையும் அதில் பகிர்ந்து கொண்டார். இதனால் அந்த பங்கின் விலை உயர்ந்தது.
இதன்மூலம் கிரிப்டோகரன்சியை விளம்பரப்படுத்துவதாக கூறி ஜனாதிபதிக்கு எதிர்ப்புகள் கிளம்பின. சில மணி நேரங்களில் எக்ஸ் தளத்தில் இருந்து அந்த பதிவை ஜேவியர் மிலே நீக்கினார்.
இதனால் முதலீட்டாளர்கள் பலர் தங்களது பணத்தை இழந்தனர். இதனை தொடர்ந்து ஜனாதிபதி ஜேவியர் மிலேவை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும் பாராளுமன்றத்தில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரவும் பிரதான எதிர்க்கட்சியான சோசலிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.
இந்த சூழலில் அர்ஜென்டினாவில் உள்ள வழக்கறிஞர்கள் ஜனாதிபதிக்கு எதிராக மோசடி புகார்களை தாக்கல் செய்தனர். இதனிடையே ஜனாதிபதி ஜேவியர் மிலே மீதான மோசடி குற்றச்சாட்டுகளை விசாரிக்க நீதிபதி ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தன்னை விடுவிக்குமாறும், தான் நல்லெண்ணத்துடன் செயற்பட்டதாகவும், ஜனாதிபதி ஜேவியர் மிலே தெரிவித்துள்ளார்
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago