Shanmugan Murugavel / 2016 ஜூலை 26 , பி.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஃபோர் கோணர்ஸ் நிகழ்ச்சியில், வடக்கு பிராந்தியத்திலுள்ள சிறுவர் தடுப்பு நிலையமொன்றிலிருந்த பதின்ம வயதினர் மீது சிறைக் காவலர்கள் தாக்குதல் நடாத்தும் அறிக்கை வெளியானமையைத் தொடர்ந்து, இது குறித்து விசாரிக்க றோயல் ஆணைக்குழுவை அமைக்கப் போவதாக அவுஸ்திரேலியப் பிரதமர் மல்கொம் டேர்ண்புல் தெரிவித்துள்ளார்.
டார்வினிலுள்ள டொன் டேல் சிறுவர் தடுப்பு நிலையத்தில், தனியாக தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆறு சிறுவர்கள், 2014ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில், கண்ணீர்ப் புகை தாக்குதலுக்கு உள்ளாகும் காணொளியையே ஃபோர் கோணர்ஸ் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், கருத்துத் தெரிவித்துள்ள டேர்ண்புல், அனைத்து அவுஸ்திரேலியர்கள் போன்று, மேற்குறித்த நிகழ்ச்யின் புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கருத்து தெரிவித்த வடக்கு பிராந்திய முதலமைச்சர் அடம் ஜைல்ஸ், மேற்குறித்த வெளிப்படுத்தல்களால் வெறுப்படைந்துள்ளதாகவும், எனினும் குறிப்பிட்ட நிறுவகங்களில் பணியாற்றும் பெரும்பான்மையான அதிகாரிகள் குறித்து நம்பிக்கையுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தவிர, புனர்வாழ்வுகள் அமைச்சர் ஜோன் எல்ஃபெரிக்கையும் பதவி விலக்கிய ஜைல்ஸ், குறித்த அமைச்சை தனது பொறுப்பின் கீழ் எடுத்துள்ளார்.
7 minute ago
15 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
15 minute ago
59 minute ago
1 hours ago