Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Ilango Bharathy / 2023 ஜனவரி 05 , பி.ப. 04:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி, கடந்த 2020ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்தது.
எனினும்,இத்தேர்தலில் மோசடி நடந்ததாகக் கூறி ஆங் சாங் சூகியின் ஆட்சியைக் கவிழ்த்த இராணுவம், மீண்டும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது.
இதனையடுத்து இராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியைத் தூண்டியமை , கொரோனா விதிகளை மீறியமை, சட்டங்களை மீறியமை , ஊழல் உள்ளிட்ட 11 குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டன
இதனையடுத்து 76 வயதான ஆங் சான் சூகிக்குக் சிறை தண்டனை விதிக்கப்பட்டது
இந்நிலையில் மியான்மரின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் 7012 கைதிகளை விடுவிக்க உள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசியுள்ள இராணுவ தலைவர் மின் ஆங் “75வது சுதந்திர தினத்தையொட்டி 7012 சிறைக் கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர். கடுமையான குற்றங்களில் ஈடுபடாதவர்களின் தண்டனை காலம் குறைக்கப்படும். இந்த ஆண்டு இறுதியில் நாட்டில் தேர்தல் நடைபெறும்.
அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்” என கூறியுள்ளார்.
மியான்மர் அரசியல் தலைவர் ஆங் சாங் சூகி இந்த விடுதலையாகும் கைதிகளின் பட்டியலில் உள்ளாரா என்பது தெரியவில்லை. விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அவர் விடுவிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago