2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஆபத்து நிறைந்தவனாக மாறுவேன் -இம்ரான் கான் எச்சரிக்கை

Ilango Bharathy   / 2022 செப்டெம்பர் 12 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான், தீவிரவாத வழக்கில் என்னை சிறையில் அடைத்தால் ஆபத்தாக மாறிவிடுவேன் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
பாகிஸ்தானின்  முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த மாதம் 20ஆம் திகதி அன்று நடந்த போராட்டத்தில் பெண் நீதிபதியை மிரட்டும் வகையில் பேசியதாக கூறப்பட்டது.
 
இதனையடுத்து அவர் மீது தீவிரவாத வழக்கு பதிவு செய்யப்பட்டதோடு,  அவர் மீது தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க நீதிமன்றத்தில் அவரை  ஆஜராகுமாறு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
 
இந்நிலையில் நேற்று முன்தினம் உயர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அவர்
என்னை எதிர்த்து தீவிரவாத வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. நீதிமன்றத்தில் அந்த வழக்கு விசாரணையின் படி என்னை சிறையில் அடைத்தால், மேலும் ஆபத்துக்குரியவனாக மாறிவிடுவேன் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X