Editorial / 2019 ஓகஸ்ட் 18 , பி.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆப்கானிஸ்தானின் காபுலில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக ஏ.எவ.பி செய்திசேவை நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் காபுலில் இடம்பெற்ற திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 63க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதுடன் 182 பேர் காயமடைந்தனர்.
சுமார் 1,000க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்துகொண்ட திருமண நிகழ்வில் நேற்றிரவு இந்த தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
விருந்தின்போது இசைக் கச்சேரி நடத்தப்பட்டதுடன். கலைஞர்கள் இசைத்துக் கொண்டிருந்தபோது, மேடையருகே வெடிகுண்டு ஒன்று திடீரென வெடித்துச் சிதறியுள்ளதாக ஆப்கான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
9 hours ago
9 hours ago
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
08 Apr 2026