S.Renuka / 2026 பெப்ரவரி 16 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கு ஆபிரிக்க நாடான நைஜீரியாவில் ஐ.எஸ். அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற அமைப்புகளும், பல்வேறு ஆயுதக்குழுக்களும், கிளர்ச்சி குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.

அதேபோல், பணத்திற்காக பொதுமக்கள், பாடசாலை குழந்தைகள், கால்நடைகளை கடத்தும் கும்பல்களும் செயல்பட்டு வருகிறது.
இந்த குழுக்கள் பாதுகாப்புப்படையினர், பொதுமக்களை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், நைஜீரியாவின் நைஜர் மாகாணம் பொர்கு நகரில் உள்ள 3 கிராமங்களுக்குள் நேற்று துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஆயுத கும்பல் நுழைந்தது.
மேலும், கிராமங்களில் உள்ள மக்களை கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டது. இந்த துப்பாக்கி சூட்டில் 46 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர் என பாதுகாப்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், கிராமங்களில் இருந்து 20க்கும் மேற்பட்டோரை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றது. இந்த சம்பவம் குறித்து அறிந்த பாதுகாப்புப்படையினர், கடத்தி செல்லப்பட்டவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
5 minute ago
10 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
10 minute ago
1 hours ago