Editorial / 2018 ஜூன் 04 , பி.ப. 08:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜோர்டானை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடனான விலை அதிகரிப்புகளுக்கெதிராக, ஐந்தாவது நாளாக ஜோர்டான் தலைநகர் அம்மானின் வீதிகளின் நூற்றுக்கணக்கான ஜோர்டானியர்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்த நிலையில், அந்நாட்டின் பிரதமர் இன்று (04) ஹானி அல் முல்கி பதவி விலகியுள்ளார்.
அமைச்சரவை அலுவலகத்துக்கருகே கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமர் ஹனி முல்கியை நீக்குமாறான கோஷங்களை எழுப்பியதுடன், கடந்த மாதம் நாடாளுமன்றத்துக்கு அனுப்பப்பட்ட வரி சட்டமூலத்தை அரசாங்கம் இரத்து செய்தாலே நாங்கள் கலைவோம் என்று தெரிவித்திருந்த நிலையில் பிரதமர் பதவி விலகியுள்ளார்.
“சட்டமூலத்தை மீளப்பெறும் வரை நாங்கள் இங்கிருப்போம்”, “இந்த அரசாங்கம் வெட்கக்கேடானது” என்றவாறாக கோஷமிட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை, கடுமையாகப் பாதுகாக்கப்பட்ட அரசாங்க அலுவலகங்களை நெருங்குவதை பொலிஸார் தடுத்திருந்தனர்.
உயர் விலையுயர்வுக்கெதிராக கடந்த ஐந்தாண்டுகளில் இடம்பெற்ற பாரிய ஆர்ப்பாட்டத்தைத் தோற்றுவித்திருந்த, சர்வதேச நாணய நிதியத்தால் ஆதரவளிக்கப்படும் வரிச் சீர்திருத்தத்தை இரத்துச் செய்வதற்கு ஹனி முல்கி கடந்த சனிக்கிழமை மறுப்புத் தெரிவித்திருந்ததுடன், இது தொடர்பாக நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டுமென்று கூறினார்.
2021ஆம் ஆண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 77 சதவீதமாகக் கடனைக் குறைக்கும் பொருட்டே வரி அதிகரிப்புகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதில், பணியாளர்களிடம் குறைந்தபட்சம் ஐந்து சதவீதம் வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதுடன், நிறுவனங்களில் 20சதவீதம் தொடக்கம் 40 சதவீதம் வரை வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 2016ஆம் ஆண்டு பெற்றுக் கொள்ளப்பட்ட 723 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் மூன்றாண்டு கடனுக்கான தொடர்ச்சியான பொருளாதார சீர் திருத்தங்களின் அடிப்படையாகவே குறித்த வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
39 minute ago
1 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
1 hours ago
9 hours ago