2025 நவம்பர் 07, வெள்ளிக்கிழமை

போதைப்பொருள் வைத்திருந்த 9 பேர் கைது

Freelancer   / 2025 நவம்பர் 07 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் கூரிய ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த சம்பவம் தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த இரண்டு தினங்களில் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட தீடீர் சோதனை நடவடிக்கைகளின்போது இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கூரிய ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் 2 பேரும் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 7 பேரும் என 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைதான சந்தேக நபர்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த யாழ்ப்பாணம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X