Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Mithuna / 2023 டிசெம்பர் 26 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆப்கானிஸ்தானில் 1996 முதல் தலிபான் அமைப்பினர் ஆட்சியில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். ஆனால், 2001ல் அமெரிக்க இராணுவம் அவர்களை ஆட்சியிலிருந்து தூக்கியடித்ததும், அவர்கள் பலவீனமடைந்திருந்தனர்.
கடந்த 2021ல் அமெரிக்க படைகள் அந்நாட்டை விட்டு வெளியேறின. தொடர்ந்து தலிபான் மீண்டும் ஆட்சிக்கு வந்தது.
சுமார் 20 வருடகாலம் கடந்து ஆட்சியை கைப்பற்றிய தலிபான் அந்நாட்டு மக்களுக்கு; குறிப்பாக பெண்களுக்கு, பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
தலிபானின் புதிய சட்டங்களின்படி பெண் குழந்தைகள் கல்வி கற்பது ஆறாம் வகுப்புடன் நிறுத்தப்படும். இதற்கு பல உலக நாடுகளும் பெண்ணிய சிந்தனையாளர்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்த போதிலும் அவற்றை ஆப்கானிஸ்தான் புறக்கணித்தது.
இந்நிலையில், பதின் வயதுகளில் 6-ஆம் வகுப்பை முடிக்கவுள்ள பல சிறுமிகள் இத்துடன் தங்களுக்கு கல்வி கற்கும் வாய்ப்பு முடிந்து போவதை எண்ணி அழுகின்றனர்.
கடந்த வாரம், இது குறித்து ஐ.நா. சபையின் சிறப்பு தூதர் ரோசா ஒடுன்பயேவா (Roza Otunbayeva), "ஒரு தலைமுறையை சேர்ந்த பெண்களின் கல்வி கற்கும் வாய்ப்பு, ஒவ்வொரு நாள் கடக்கும் நிலையில் பறிக்கப்படுகிறது" என கவலை தெரிவித்தார்.
ஏழாம் வகுப்பிற்கு செல்வோம் என நம்பியிருந்த பல மாணவிகள் தங்கள் கல்வியே முடிவடைவதால், எதிர்காலம் குறித்த அச்சத்திலும், தாங்கள் சாதிக்க நினைத்தவற்றை இனி அடைய முடியாத துக்கத்திலும் அழுகின்றனர் என தெரிய வந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago