Mithuna / 2024 ஜனவரி 08 , பி.ப. 02:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்கொரியாவின் யோன்பியாங் தீவுப்பகுதியை நோக்கி, வடகொரியா திடீர் தாக்குதல் நடத்தியதாக தென்கொரிய இராணுவம் குற்றம்சாட்டியது. இதனால் தீவில் வசிக்கும் மக்களை இடம்பெயருமாறு உத்தரவிட்டுள்ளதாக தென்கொரியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந் நிலையில் தென்கொரியாவின் குற்றச்சாட்டை வடகொரியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது குறித்து வடகொரிய ஜனாதிபதி கிம் ஜான் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் ,“எங்கள் இராணுவம் தென்கொரியான் தீவுப்பகுதி மீது ஒரு முறை கூட சுடவில்லை. ஆனால் எங்கள் இராணுவம் 60 முறை துப்பாக்கியால் சுடுவது போன்ற சத்தத்தை ஏற்படுத்தும் வெடிப்பொருட்களை வெடிக்கச் செய்து, அதன் எதிர்வினையை உற்றுநோக்கியது.
அதன் முடிவு நாம் எதிர்பார்த்தது போலவே இருந்தது. வெடிப்பொருட்களின் சத்தத்தை தாக்குதல் என்று தவறாக கணித்து, வெட்கமின்றி பொய்களை உருவாக்கிவிட்டனர். இனி வருங்காலத்தில், வடக்கு வானில் இடி விழும் சத்தத்தைக் கேட்டால் கூட, அதை வடகொரிய இராணுவத்தின் பீரங்கித் தாக்குதலாக அவர்கள் தவறாக மதிப்பிடுவார்கள்” என தெரிவித்துள்ளார்.
22 Mar 2026
22 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Mar 2026
22 Mar 2026