Editorial / 2019 ஓகஸ்ட் 06 , பி.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிரிய எதிரணியின் கட்டுப்பாடிலுள்ள இறுதிப் பலமான இடத்திலுள்ள யுத்தநிறுத்தமொன்றை தவிர்த்து, இட்லிப்பிலுள்ள ஆயுதந்தரித்த போராளிகளுக்கெதிரான நடவடிக்கைகளை சிரிய இராணுவம் மீண்டும் ஆரம்பித்துள்ளது.
சிரிய அரச ஊடகத்தால் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில், ரஷ்யாவால் ஆதரிக்கப்பட்ட மூன்று மாத நடவடிக்கைகளைத் தொடர்ந்து கஸக்ஸ்தானில் கடந்த வாரம் இடம்பெற்ற பேச்சுகளின்போது இணங்கப்பட்ட யுத்தநிறுத்தத்தை போராளிகள் மீறியதாக இராணுவம் குற்றஞ்சாட்டியிருந்தது.
துருக்கியால் ஆதரவளிக்கப்படும் ஆயுதந்தரித்த பயங்கரவாதக் குழுக்கள், யுத்தநிறுத்தத்தின்படி ஒழுக மறுத்ததாகவும் சூழவுள்ள பகுதிகளில் பொதுமக்கள் மீது பல தாக்குதல்களை ஆரம்பித்ததாகவும் இராணுவம் தெரிவித்ததாக சனா செய்தி வெளியிட்டிருந்த நிலையில், பயங்கரவாதிகளுக்கெதிராக தங்களது இராணுவ நடவடிக்கைகளை ஆயுதப் படைகள் ஆரம்பிக்கவுள்ளதெனக் கூறப்ப்பட்டிருந்தது.
இந்நிலையில், தென் இட்லிப்பிலுள்ள எதிரணியால் கட்டுப்படுத்தப்படும் நகரான கான் ஷெய்க்கூனில் பல வான் தாக்குதல்கள் இடம்பெற்றதாக எதிரணிச் செயற்பாட்டாளர்கள் தெரிவித்திருந்தனர்.
இதேவேளை, யுத்தநிறுத்தம் இரத்துச் செய்யப்பட்ட சில நிமிடங்களில் குறித்த பிராந்தியம் மீதான சிரிய அரசாங்கத்தின் வான் தாக்குதல்கள் ஆரம்பித்ததாகத் தெரிவித்த மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம், ரஷ்ய விமானங்களும் இணைந்து கொண்டதாகக் கூறியுள்ளது.
இட்லிப்பின் மேற்கு முனையில் ரஷ்ய ஜெட்கள் தாக்குதல் நடத்தியதாகவும், தென்பகுதியில் சிரிய, ரஷ்ய விமானங்கள் இரண்டும் குண்டுத் தாக்குதல்களை மீள ஆரம்பித்ததாக பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இட்லிப்புடன் இணைந்த லடாக்கியா மாகாணத்திலுள்ள தமது முக்கிய வான்தளமான ஹெய்மிம்மின் புறநகர்களில் எதிரணி ஷெல் தாக்குதல்களை நடத்தியதாக ரஷ்ய பாதுகாப்பமைச்சு கூறியுள்ளது.
8 minute ago
40 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
40 minute ago
52 minute ago