Editorial / 2019 ஜூன் 20 , பி.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிரியாவின் இஸ்லாமிய ஆயுததாரிகளின் கட்டுப்பாட்டிலுள்ள வடமேற்கில், அரசாங்கத் தாக்குதல்களில் 16 பொதுமக்களும், ஒன்பது ஆயுததாரிகளும் நேற்றுக் கொல்லப்பட்டதாக மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு இட்லிப் மாகாணத்திலுள்ள ஜபல் அல்-ஸாவியா பிராந்தியத்திலுள்ள கிராமமொன்றின் மீதான தாக்குதலில் 11 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் கூறியுள்ளது.
தாக்குதல் இடம்பெற்ற இடத்திலிருந்து 100 மீற்றருக்கு அப்பால் மனிதச் சிதிலங்களை கண்டுபிடித்த ஏ.எஃப்.பி செய்திச் சேவையின் புகைப்படப்பிடிப்பாளரொருவரின் கருத்துப்படி குண்டுத் தாக்குதலில் கடைகள் அழிவடைந்ததாகவும், சடலங்கள் சிதைவடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இடிபாடுகளுக்குள்ளிலிருந்து சடலங்களை மீட்புப் பணியாளர்கள் மீட்டது அவதானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தென் இட்லிப்பிலுள்ள அயல் நகரங்கள், கிராமங்களின் மீது இடம்பெற்ற வான் தாக்குதல்களில் நான்கு பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், இட்லிப்பின் மாகாணத் தலைநகரின் எல்லையில் இடம்பெற்ற வான் தாக்குதலில் பொதுமகனொருவர் கொல்லப்பட்டதாக மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஹமா மாகாணத்துக்கு அருகே வடக்கில் அரசாங்கத்தின் றொக்கெட் தாக்குதலில் ஒன்பது இஸ்லாமிய ஆயுததாரிகள் கொல்லப்பட்டதாக மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் கூறியுள்ளது.
45 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
1 hours ago
1 hours ago