2025 மே 17, சனிக்கிழமை

இந்து பெண் கொலை: இஸ்லாமிய மதகுரு கண்டனம்

Freelancer   / 2023 ஜனவரி 21 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் தயா பீல் என்ற இந்துப் பெண் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டமைக்கு முஸ்லிம் மதகுரு முப்தி ஷாமூன் காஸ்மி கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் ஒரு சகோதரி அவமரியாதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்றும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காஸ்மி கூறினார்.

"அவர்களிடம் மனிதாபிமானம் இருக்கிறதா என்று பாகிஸ்தான் அரசிடம் நான் கேட்க விரும்புகிறேன்.  பாகிஸ்தானில் ஒரு சகோதரி அவமரியாதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இஸ்லாம் மக்களின் மரியாதைக்காகவும், அவர்களின் உரிமைகளுக்காகவும் போராடுகிறது" என்று காஸ்மி கூறினார்.

முகமது நபி சமத்துவம் மற்றும் மரியாதை பற்றி பேசினார், அதனால்தான் உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியலில் அவரது பெயர் வருகிறது என்றும் மக்களின், குறிப்பாக பெண்களின் நலனுக்காக பாடுபட்டார் என்றும் குறிப்பிட்டார்.

நாட்டைக் கட்டுக்குள் கொண்டுவர பாகிஸ்தான் அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையிடம் நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன் என்று காஸ்மி கூறினார்.

“பாகிஸ்தான் அரசு குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும். அவர்களை தூக்கிலிட வேண்டும் அல்லது நேரடியாக சுட வேண்டும். மேலும், இந்திய அரசு பாகிஸ்தான் அரசுக்கு கடிதம் எழுதி, 24 மணி நேரத்துக்குள் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், ஐ.நா.வுக்கு கடிதம் எழுத வேண்டும்” என காஸ்மி கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் தயா பீல் என்ற இந்துப் பெண் கொல்லப்பட்டதை அடுத்து, தனது சிறுபான்மையினரைப் பாதுகாக்குமாறு பாகிஸ்தானுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

பீல் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதை அடுத்து பாகிஸ்தானின் சிந்துவில் சீற்றம் நிலவியது. தார்பார்கர் சிந்து பகுதியைச் சேர்ந்த பாகிஸ்தான் மக்கள் கட்சியின் செனட்டர் கிருஷ்ண குமாரி தனது கிராமத்துக்கு விரைந்து சென்று இந்துப் பெண் கொடூரமாக கொல்லப்பட்ட செய்தியை உறுதிப்படுத்தினார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .