2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

இனி விண்வெளியைச் சுற்றிப் பார்க்கலாம்

Ilango Bharathy   / 2022 செப்டெம்பர் 26 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவானது தனியார் பயணிகளுக்கென தன் முதல் வணிக விண்வெளி பயணத்தினை ஆரம்பிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது.
 
இது குறித்து ‘லாங் மார்ச் 11 ரொக்கெட்” திட்டத்தின் பொது இயக்குனரும், அரசாங்க ஆதரவுடன்கூடிய வணிக விண்வெளி ஏவுகணை நிறுவனமான CAS ஸ்பேஸின் நிறுவனருமான யாங் யிகியாங்கை  கருத்துத் தெரிவிக்ககையில்  ”சீன விண்வெளி சுற்றுலாதுறை என்பது 2025 ஆம் ஆண்டளவில் முழுமையாக வளர்ச்சியடையும். இப்பயணத்திற்காக ஒரு நபருக்கு 2-3 மில்லியன் யுவான் கட்டணமாக வசூலிக்கப்படலாம்”  என்றார்.
 
மேலும்  இன்று பூமியின்  சுற்று வட்டப் பயணம் என்பது மிகவும் வளர்ச்சி அடைந்து வருவதுடன்  பெரும்பாலான நடுத்தர மக்களுக்கு ஏற்றதாக  இது மாறிவருவதாகவும், சீன விண்வெளி பயணத்தில் ஒரு நேரத்தில், 7 சுற்றுலாப்பயணிகள் வரை கடல் மட்டத்தில் இருந்து 100 கிலோ மீற்றர் உயரத்தை அடைந்து, பிறகு பூமிக்கு  10 நிமிடங்களில் திரும்பலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .