Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 ஏப்ரல் 18 , பி.ப. 07:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ) தலைவர்கள், அதிகாரத்தை தக்கவைக்க எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதை நாட்டின் பிரதமரை வெளியேற்றும் வரை நாட்டில் நடந்த அரசியல் நாடகம் காட்டுகிறது என, பாகிஸ்தானின் முக்கிய பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
“இதற்கு முன்னர் யாருக்காவது சந்தேகம் இருந்தால், இந்த அத்தியாயம் அவர் அதிகாரத்தை தக்கவைக்க எந்த எல்லைக்கும் செல்வார் என்பதைக் காட்டுகிறது“ என, இம்ரான் கான் முன்வைத்த வெளிநாட்டு தலையீடு குற்றச்சாட்டுகளை நிராகரித்து, பாகிஸ்தான் பத்திரிகையாளரும் தொலைக்காட்சி ஆளுமையுமான ஹமீத் மிர், தி வொஷிங்டன் போஸ்ட்டின் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
"கானின் அரசாங்கம் ஒரு பெரிய நெருக்கடியை நோக்கிச் செல்கிறது என்று ஜனவரியில் நான் எழுதினேன், இது முழுக்க முழுக்க அவரே உருவாக்கியது. அவரது வீழ்ச்சியைத் திட்டமிட அவரது எதிரிகளுக்கு வெளிநாட்டிலிருந்து எந்த உதவியும் தேவையில்லை”என்று மிர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிதாக தெரிவு செய்யப்பட்ட பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் கடுமையான பேச்சு, இம்ரான் கானின் சதி விவரிப்புக்கு பெரும் அடியாக அமைந்தது என்பதை அவர் விளக்கினார்.
இம்ரான் கான் தன்னை அதிகாரத்தில் வைத்திருக்க பாகிஸ்தான் இராணுவத்தின் தலைவருடன் ஒப்பந்தம் செய்ய முயன்றார். எனினும், ஜெனரல் மறுத்துவிட்டார் என, ஒரு பாகிஸ்தான் பத்திரிகையாளர் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வா தனது பதவிக் காலத்தை நீட்டிக்க விரும்பவில்லை என்று பாகிஸ்தான் இராணுவ ஊடகப் பிரிவு அறிவித்ததுடன், அவர் தனது பதவிக்காலத்தை இந்த ஆண்டு நவம்பரில் முடிப்பார் என்றும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஷெபாஸ் ஷெரீப் ஒரு சாதாரண அரசியல்வாதியை எதிர்கொள்ளவில்லை என்பதை உணர வேண்டும் என்று தனது வொஷிங்டன் போஸ்ட் கட்டுரையில் கடைசியாக மிர் எச்சரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .