2026 ஜனவரி 15, வியாழக்கிழமை

இரண்டு கப்பல்களைக் கைப்பற்றிய ஐ. அமெரிக்கா

Shanmugan Murugavel   / 2026 ஜனவரி 08 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெனிசுவேலாவின் எண்ணெய் ஏற்றுமதிகளுடன் தொடர்புபட்ட இரண்டு எண்ணெய்க் கப்பல்களை வட அத்லாண்டிக், கரீபியனில் நடவடிக்கைகளில் தாம் கைப்பற்றியதாக ஐக்கிய அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ரஷ்யக் கொடியுடனிருந்த மரினெராவை அது ஐஸ்லாந்துக்கும் ஸ்கொட்லாந்துக்குமிடைப்பட்ட கடற்பரப்பில் பயணித்த நிலையில் ஏறத்தாழ இரண்டு வாரங்கள் தேடிய பின்னர் ஐ. அமெரிக்க படைகள் தரையிறங்கியிருந்தன. இந்நடவடிக்கைக்கு பிரித்தானியா வான், கடல் பாதுகாப்பு வழங்கியிருந்தது.

தவறான செயற்பாடுகளில் ஈடுபடுவதாக ஐ. அமெரிக்காவால் குற்றஞ்சாட்டப்பாட்ட எம்/டி சோபியா என்ற இரண்டாவது எண்ணெய்க் கப்பலில் கரீபினியனில் ஐ. அமெரிக்கப் படைகள் தரையிறங்கியுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X