2025 நவம்பர் 05, புதன்கிழமை

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 8 பேர் பலி

Editorial   / 2019 மார்ச் 29 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷ், சாட்டோகிராம் - காக்ஸ் பஜார் நெடுஞ்சாலையில், நேற்று (28) அதிகாலை, பயணிகளை ஏற்றிச் சென்ற சிரிய ரக பஸ்ஸொன்று, எதிரே வந்த பஸ்ஸொன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், 8 பேர் பலியாகியுள்ளனர்.

பஸ்களில் பயணித்த 25 பேர், படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்களின் சிலரின் நிலை, கவலைக்கிடமாக உள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்து, லோககாரா உபாசிலா என்ற இடத்தில் வைத்து இடம்பெற்றுள்ளது. இரண்டு பஸ்களும், மிக வேகமாக வந்து மோதியதாலேயே, 8 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்புடைய ​விசாரணைகளை, பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X