Freelancer / 2025 நவம்பர் 05 , பி.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
களனிக்கும் வனவாசலவுக்கும் இடையிலான ரயில் கடவையில் கார் ஒன்று ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்து தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு கோட்டையில் இருந்து பொல்கஹவெல நோக்கி சென்ற ரயிலுடனே குறித்த கார் இன்று (5) மோதியுள்ளது.
விபத்தில் கார் 200 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்து காரணமாக பிரதான ரயில் மார்க்கத்தில் ரயில் சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. R
1 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
4 hours ago