Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Ilango Bharathy / 2022 ஏப்ரல் 17 , பி.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
இராணுவத்திற்கு வயாகரா மற்றும் செயற்கை ஆணுறுப்புகளை வாங்குவதற்கு லட்சக்கணக்கான பணத்தை பிரேசில் அரசாங்கம் செலவிடுவதாகத் தெரிவித்து அந்நாட்டு எதிர்க் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரேசிலில் ஜனாதிபதி ஜெயர் பொல்சொனாரோ(Jair Bolsonaro) தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அந்நாட்டு எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எலியாஸ் வாஸ் ”பிரேசில் இராணுவத்துக்கு எந்த விடயங்களுக்கெல்லாம் அரசு செலவு செய்கிறது ”எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பிரேசில் இராணுவத்திற்கு வயாகரா மாத்திரைகள் மற்றும் செயற்கை ஆணுறுப்புகளை வாங்குவதற்கு லட்சக்கணக்கான பணத்தை அரசாங்கம் செலவிடுவதாகப் பதிலளிக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த எதிர்க்கட்சி உறுப்பினர் எலியாஸ் வாஸ் இத் தகவலை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இத்தகவலானது அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதனையடுத்து பிரேசிலில் பொது மக்களுக்கு உயிர் காக்கும் மருந்துகளுக்குக் கூட தட்டுப்பாடு உள்ள நிலையில், இராணுவ வீரர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் செலவழித்து வயாகராவும், செயற்கை ஆணுறுப்புகளும் வாங்குவது தேவைதானா? என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருவதோடு இதற்கு எதிராகப் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந் நிலையில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பிரேசில் இராணுவம் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, இது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
அதில் “உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படும் இராணுவத்தினருக்கு சிகிச்சை அளிக்கவே வயாகரா மாத்திரைகளைக் கொள்வனவு செய்வதாகவும், இவ்விவகாரத்தில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் செயற்கையான ஆணுறுப்புகள் வழங்குவது குறித்து இராணுவம் எந்தவித விளக்கமும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .