Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 டிசெம்பர் 13 , மு.ப. 09:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனாவில் காரமான உணவை உட்கொண்ட இளம்பெண் ஒருவரின் விலா எலும்பு முறிவடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் உள்ள ஷாங்காய் நகரைச் சேர்ந்த ஹூவாங் என்ற பெண்ணொருவர் அண்மையில் காரமான உணவொன்றை உட்கொண்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த உணவை உட்கொண்ட பின்னர் அவருக்கு கடுமையான இருமல் தொடங்கியுள்ளது. இந்நிலையில் அவர் இரும்மிக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அவர் மார்பில் ஏதோ உடையும் சத்தம் கேட்டுள்ளது.
எனினும் அவர் அதனை அலட்சியமாக எடுத்துக் கொண்டுள்ளார். இந்நிலையில் சிறிது நாட்களுக்குப் பின் ஹூவாங் பேசுவது மற்றும் சுவாசிப்பதில் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ள தொடங்கியுள்ளார்.
இதனையடுத்து மருத்துவமனை சென்ற அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சியொன்று காத்திருந்துள்ளது.
சி.டி ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு 4 விலா எலும்புகள் உடைந்தது தெரியவந்துள்ளது.
அதாவது மருத்துவ அறிக்கையின் படி, பெண்ணின் விலா எலும்புகள் உடைந்ததற்கு அடிப்படை காரணம் அவரது ஆரோக்கியமற்ற குறைந்த உடல் எடை தான் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இது குறித்து மருத்துவர் கூறியதாவது, உங்கள் தோலை தாண்டி விலா எலும்புகள் தெளிவாக வெளியே காணப்படுகிறது.
எலும்பை தாங்கும் தசைகள் எதுவும் இல்லை. அதனால் இருமலின் போது உங்களின் விலா எலும்புகள் எளிதில் முறிந்து விடும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் எலும்பு முறிவு பாதிப்பில் இருந்து அப்பெண் மீண்டு தன்னுடைய தசை மற்றும் மேல் உடை எடையை அதிகரிக்க உடற்பயிற்சி செய்வதாக தெரிவித்துள்ளார்.
4 minute ago
42 minute ago
2 hours ago
14 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
42 minute ago
2 hours ago
14 Oct 2025