Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Freelancer / 2022 ஜூன் 28 , பி.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று நடைபெற்ற G7 உச்சி மாநாட்டில், இலங்கையின் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்த மேலதிகமாக 20 மில்லியன் டொலர் கூடுதல் உதவியாக வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார்.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் தகவலின் படி,
800,000 இலங்கை குழந்தைகளுக்கு உணவளிப்பதற்கும், சுமார் 27,000 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மாருக்கு போசாக்கு கொடுப்பனவுகளை வழங்குவதற்கும், பாடசாலைகளில் ஊட்டச்சத்து திட்டத்தை ஆதரிப்பதையும் இந்த நிதியுதவி நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும், உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்காக சுமார் 30,000 விவசாயிகளுக்கு ஆதரவளிக்கவும் இந்த முயற்சி திட்டமிட்டுள்ளது.
"இலங்கைக்கு 20 மில்லியன் டாலர் கூடுதல் உதவி வழங்குவதாக ஜனாதிபதி பிடென் அறிவித்திருப்பது, உணவுப் பாதுகாப்பு, பொது சுகாதாரம் மற்றும் அனைத்து இலங்கை மக்களின் பொருளாதார நல்வாழ்வுக்கான அமெரிக்காவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது" என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் கூறினார். (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
21 minute ago
31 minute ago
34 minute ago