2025 நவம்பர் 05, புதன்கிழமை

இலங்கை பயங்கரவாதத் தாக்குதல்: சென்னையில் மூவர் கைது

Editorial   / 2019 ஜூலை 14 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் தொடர் குண்டுத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளுடன் தொடர்பைப் பேணி வந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில், சென்னையைச் சேர்ந்த மூன்று பேரை தேசிய புலனாய்வு அதிகாரிக் கைது செய்துள்ளனர்.

சென்னை, நாகை மாவட்டங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள், நேற்று (13) நடத்திய சோதனையில், பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு சதி திட்டம் தீட்டியதாக, முக்கிய ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் சென்னை, நாகையில் நடைபெற்ற சோதனையில் 3 பேர் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருப்பதை, என்.ஐ.ஏ அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

அதற்கமைய, குறித்த 3 சந்தேகநபர் மீதும் தடுப்புச் சட்டம், சதி வேலைக்கு நிதி திரட்டியது, பயங்கரவாதக் குழுவை உருவாக்க முயற்சித்தது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த மூன்று பேரும், தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இதேவேளை, சென்னை மண்ணடியில் செயற்பட்டு வரும் “வஹாதத்தே இஸ்லாமி ஹிந்த்” அமைப்பின் அலுவலகத்தில் தேசிய புலனாய்வு சோதனையில் ஈடுபட்டனர்.

இதன்போது, அலைபேசிகள், மடிக்கணினி, ஹார்ட் டிஸ்க், பென் டிரைவ் உள்ளிட்ட ஏராளமான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X