Freelancer / 2024 செப்டெம்பர் 24 , மு.ப. 09:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தெற்கு லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் உள்ள ஹைஃபா, கலிலி, கோலன் மற்றும் நாசரேத் ஆகிய இடங்களில் வான்வழி ஊடாக பல ஷெல் மற்றும் ரொக்கெட் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.
இந்நிலைமையைக் கருத்திற் கொண்டு அவ்வப்போது மேற்கொள்ளப்படும் இந்த தாக்குதல்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் அறிவித்துள்ளார்.
பாதுகாப்பு சத்தம் எழுப்பப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும், இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தில் பணிபுரியும் இலங்கையர்கள் அருகில் உள்ள பாதுகாப்பான வீடுகளுக்குச் சென்று தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். R
3 hours ago
3 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago
6 hours ago