Freelancer / 2024 நவம்பர் 26 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
இஸ்ரேல்- ஹிஸ்புல்லாவுக்கு இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான போர் நிறுத்த ஒப்பந்தம் இன்னும் ஓரிரு நாட்களுக்குள் எட்டப்படலாம் என்று, அமெரிக்காவுக்கான இஸ்ரேல் தூதுவர்ர் மைக் ஹெர்சாக் கூறியுள்ளார்.
தூதுவர் மைக் ஹெர்சாக், இஸ்ரேலிய இராணுவ வானொலிக்கு அளித்த நேர்காணலின் போதே, இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
“போர் நிறுத்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு முன் இன்னும் சில பிரச்சினைகள் எஞ்சியுள்ளன. எந்தவொரு ஒப்பந்தமாக இருந்தாலும் அரசாங்கத்தின் ஒப்புதல் தேவை. ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இன்னும் சில நாட்களில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.
ஹிஸ்புல்லா ஒப்பந்த விதிகளை மீறினால், நடவடிக்கை எடுப்பதற்கான உரிமையை வழங்க வேண்டும் என்று இஸ்ரேல் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஹிஸ்புல்லா மற்றும் இஸ்ரேலிய படைகளை தெற்கு லெபனானில் இருந்து வெளியேற்றவேண்டும் என இந்த ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2006ஆம் ஆண்டில் நடந்த போர், ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபின் முடிவுக்கு வந்தது. ஆனால், இந்த தீர்மானத்தை ஹிஸ்புல்லா கடைப்பிடிக்கவில்லை என்றும், தெற்கு லெபனானில் இருந்து ஹமாஸ் பாணியிலான எல்லை தாண்டிய தாக்குதலை நடத்தலாம் என்றும் இஸ்ரேல் தரப்பில் கவலை தெரிவிக்கப்பட்டது.
இதேபோல், இஸ்ரேலும் அந்த தீர்மானத்தை மீறியதாக லெபனான் கூறுகிறது.
இந்த சூழ்நிலையில், புதிய ஒப்பந்தத்தில் இஸ்ரேல் முன்வைத்த கோரிக்கையை லெபனான் ஏற்குமா என்பது தெளிவாக தெரியவில்லை.
எனினும், போர் நிறுத்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக கடந்த வாரம் இரு தரப்புக்கும் இடையே அமெரிக்காவின் உயர்மட்ட தூதுவர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், ஒப்பந்தம் மீது நம்பிக்கை வந்துள்ளதாக, அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
7 minute ago
13 minute ago
24 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
13 minute ago
24 minute ago
25 minute ago