Freelancer / 2026 ஏப்ரல் 01 , மு.ப. 08:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரானின் இஸ்பகான் நகரில் உள்ள ஆயுத கிடங்கு மீது அமெரிக்க போர் விமானம் நேற்று 900 கிலோ எடை கொண்ட ‘பங்கர்' குண்டை வீசியது. இதில் ஆயுத கிடங்கு வெடித்துச் சிதறி தரைமட்டமானது.
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள ராணுவ முகாம்களை குறி வைத்து அமெரிக்க, இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று குண்டுமழை பொழிந்தன.
மேலும் ஈரானின் இஸ்பகான் நகரில் பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டு உள்ள ஆயுத கிடங்கு மீது அமெரிக்க போர் விமானம் நேற்று 900 கிலோ எடை கொண்ட ‘பங்கர்’ குண்டை வீசியது. இந்த குண்டு பூமியை துளைத்துச் சென்று ஆயுத கிடங்கை துல்லியமாகத் தாக்கியது. இதில் ஆயுத கிடங்கு வெடித்துச் சிதறி தரைமட்டமானது. இதுதொடர்பான வீடியோவை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டிருக்கிறார். (a)

6 minute ago
36 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
36 minute ago
51 minute ago