Freelancer / 2026 மார்ச் 01 , பி.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானின் மீது நடத்திய வான்வழித் தாக்குதல்களில், அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநிஜாத் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் கிழக்குப் பகுதியில் உள்ள நர்னக் மாவட்டத்தில் அமைந்துள்ள அஹ்மதிநிஜாத்தின் இல்லத்தைக் குறிவைத்து சனிக்கிழமை இரவு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் 69 வயதான மஹ்மூத் அஹ்மதிநிஜாத் மற்றும் அவரது மெய்க்காப்பாளர்கள் உயிரிழந்துள்ளதாக ஈரானின் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
சில வாரங்களுக்கு முன்னர் ஈரானில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள் மற்றும் ஆட்சி கவிழ்ப்பு முயற்சியைத் தொடர்ந்து, அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்ததாகவும், அந்த இடத்தைத் துல்லியமாகக் கண்டறிந்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. (a)
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago