2026 மார்ச் 07, சனிக்கிழமை

ஈரானின் 30 போர்க் கப்பல்களை தகர்த்தது அமெரிக்கா

Freelancer   / 2026 மார்ச் 07 , மு.ப. 09:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈ​ரான் கடற்​படை​யின் ட்ரோன் ஏவும் கப்​பல் உட்பட 30 இற்கும் மேற்​பட்ட கப்​பல்​களை தகர்த்​த​தாக​வும், கடந்த 72 மணி நேரத்​தில் ஈரானில் 200 இலக்​கு​கள் மீது தாக்குதல் நடத்​தப்​பட்​ட​தாக​வும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க இராணுவ கமாண்​டர் அட்​மிரல் பிராட் கூபர் , பாதுகாப்​புத்​துறை அமைச்​சர் பீட் ஹெக்​சேத் ஆகியோர் புளோரி​டா​வில் நேற்று அளித்த பேட்​டி​யில், ஈரான் கடற்​படையை ஒட்டு மொத்​த​மாக அழிக்​கும் நடவடிக்​கை​யில் அமெரிக்க படைகள் ஈடு​பட்​டுள்​ளன.

ஈரானின்மிகப் பெரிய ட்ரோன் ஏவும் போர்க்​கப்​பலை நேற்று தகர்த்​தோம். அது தற்​போது எரிந்து கொண்டிருக்கிறது. அமெரிக்கா - இஸ்​ரேல் தாக்​குதல் தொடங்​கிய​தில் இருந்து இது​வரை 30 இற்​கும் மேற்​பட்ட ஈரான் போர்க்​கப்​பல்​கள் மூழ்​கடிக்​கப்​பட்​டுள்​ளன.

கடந்த 72 மணி நேரத்​தில், ஈரானின் சுமார் 200 இலக்​கு​கள் மீது அமெரிக்க படைகள் தாக்​குதல் நடத்​தி​யுள்​ளன. பூமிக்கு அடி​யில் ஈரான் அமைத்​துள்ள ஏவு​கணை தளங்கள் மீது, அமெரிக்​கா​வின் பி-2 குண்டு வீச்சு விமானங்​கள் 2,000 பவுண்ட் எடை​யுள்ள பல குண்​டு​களை போட்​டுள்​ளன.

இதன் காரண​மாக கடந்த 24 மணி நேரத்​தில் ஈரானின் ஏவுகணைத் தாக்​குதல் 90 சதவீதம் குறைந்துள்​ளது, ட்ரோன் தாக்​குதல் 83 சதவீதம் குறைந்​துள்​ளது. வரும் நாட்களில் ஈரான் மீதான விமான தாக்​குதல் தீவிரமடையும் என்று கூறினர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .