S.Renuka / 2026 மார்ச் 01 , மு.ப. 11:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரானில் அமெரிக்க இராணுவ தலையீடு, ஆட்சி மாற்றத்திற்கு பிறகு என்ன நடக்கும் என்பது குறித்து ஏபிசி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் பட்டத்து இளவரசர் பஹ்லவி விளக்கம் அளித்துள்ளார்.
'ஜனநாயக மாற்றத்தை ஆதரிக்க தயார்' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் ஆட்சியாளரான மதகுரு கமேனி கொல்லப்பட்டார். இதனால் ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதியாகியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், 50 ஆண்டுக்கு முன் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்த ஈரானின் பட்டத்து இளவரசர் ரெசா பஹ்லவி ஈரானின் எதிர்காலம் குறித்து ஏபிசி செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.
இளவரசர் கூறியதாவது: அமெரிக்கா மேற்கொண்டுள்ள நடவடிக்கை, ஈரானில் அதிகமான உயிர்களை பாதுகாப்பதற்கான மனிதாபிமான தலையீடாக இது இருக்கக்கூடும். இது மிகவும் முக்கியமானது. ஈரான் மக்கள் தங்கள் சக்தியை காட்டி இருக்கின்றனர்.
கடந்த மாதம் நீங்கள் கண்டது போல் தெருக்களில் மக்கள் ஆட்சிக்கு எதிராக துணிச்சலுடன் கோஷமிட்டனர். அந்த மக்களை கமேனி தலைமையிலான ஆட்சியாளர்கள் இத்தனை ஆண்டுகளாக நசுக்கி வைத்திருந்தனர்.
நீங்கள் இந்த ஆட்சியை ஒழித்தால் அணு ஆயுத அச்சுறுத்தல் உட்பட உலகம் எதிர்க்கொண்டுள்ள அனைத்து பிரச்சினைகளும் ஒரே நேரத்தில் நீக்கிவிடும். இந்த ஆட்சி இனி இல்லையென்றால், பயங்கரவாதம், அணு ஆயுத அச்சுறுத்தல், பிராந்தியத்தில் நிலவும் அமைதியற்ற சூழல் இவை அனைத்தும் உடனடியாக காணாமல் போய்விடும்.
ஆட்சி வீழ்ந்தால் ஈரான் மக்களுக்கான ஜனநாயக மாற்றத்தை ஆதரிக்க நான் முன் வருவேன். அமெரிக்கா தாக்கினாலும் சரி, ஈரான் மக்கள் தங்கள் போராட்டத்தை தொடர்வார்கள். அத்தகைய தலையீடு ஆட்சியின் வீழ்ச்சிக்கு மட்டுமே உதவும். மக்கள் வெற்றி பெற ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்க வேண்டும். ஈரானின் இராணுவம் எதிர்காலத்தை கட்டி எழுப்ப அனைத்து நாடுகளும் உதவ வேண்டும்.
இஸ்லாமிய அரசு தூக்கியெறியப்பட்டால், எதிர்க்கட்சியால் அரசை நடத்த முடியாது என்பதுதான் பலரின் கவலை என்று நான் நினைக்கிறேன். இதற்கு உரிய தீர்வு காண முடியும் என்றார்.
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago