Editorial / 2026 ஜனவரி 14 , மு.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஈரான் நாட்டில் போராட்டம் மிகப் பெரியளவில் வெடித்துள்ள சூழலில், நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது. இதற்கிடையே அங்கு ஏற்பட்டுள்ள இந்த வன்முறை போராட்டங்களில் சுமார் 12,000 முதல் 20,000 பேர் வரை உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஒரு பக்கம் உயிரிழப்புகள் உச்சம் தொடும் நிலையில், போராட்டங்களும் தொடர்ந்து நடந்து வருகிறது.
ஈரான் நாட்டில் அங்குள்ள கமேனி அரசுக்கு எதிராக மிகப் பெரிய போராட்டம் நடந்து வருகிறது. சுமார் இரண்டு வாரங்களாகவே போராட்டம் தொடரும் நிலையில், நாளுக்கு நாள் இது பெரியளவில் வெடித்து வருகிறது. நிலைமை மோசமாகப் போகும் சூழலில், போராட்டத்தை ஒடுக்க ஈரான் அரசு மோசமான வன்முறையைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது.
இதற்கிடையே அங்கு நிலைமை எந்தளவுக்கு மோசம் என்பதைக் காட்டும் வகையில் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. சர்வதேச வல்லுநர்கள் கணித்ததை விட அங்கு நிலைமை மோசமாகக் கொடூரமானதாக இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.. போராட்டக்காரர்கள் மீது ஈரான் அரசு மோசமான தாக்குதல்களை நடத்தி வரும் சூழலில், இதில் சுமார் 12,000 முதல் 20,000 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தளவுக்கு உயிரிழப்புகள் அங்கு நடந்திருந்தால்.. அது மிகக் கொடூரச் சம்பவமாகவே இருக்கும்.
இது தொடர்பாகப் பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் யெவெட் கூப்பர் கூறுகையில்,, "பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருக்கலாம். 2000 அல்லது அதற்கு மேல் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் எனக்கு உள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
52 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago
2 hours ago