2025 ஜூலை 05, சனிக்கிழமை

ஈரான் வான்வெளி மீண்டும் திறப்பு

Freelancer   / 2025 ஜூலை 05 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரானில் மீண்டும் சர்வதேச விமான போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே சுமார் 12 நாட்கள் நடந்த மோதல் நீடித்த நிலையில், ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியது.

இதனையடுத்து, போர் பதற்றம் காரணமாக ஈரானில் சர்வதேச விமான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், சுமார் இருபது நாட்களுக்கு பிறகு ஈரானில் மீண்டும் சர்வதேச விமான போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.

இதன்படி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஈரானில் நேற்று தரையிறங்கியதாக ஈரானின் விமான போக்குவரத்து துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .