Lenin Raj / 2026 மார்ச் 17 , பி.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஈரானின் உயர்மட்ட தேசிய பாதுகாப்புச் சபையின் செயலாளர் அலி லாரிஜானி தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் (Katz) தெரிவித்துள்ளார்.
எனினும் ஈரானிய அரசாங்கம் அவரின் உயிரிழப்பு தொடர்பில் இதுவரை உறுதிப்படுத்தவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்பட்டால், கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் முன்னாள் உயர்மட்டத் தலைவர் அலி காமேனி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்டதன் பின்னர், இந்தப் யுத்தத்தில் கொல்லப்பட்ட மிக உயர்மட்ட அரசியல் பிரமுகராக லாரிஜானியும் ஒருவராவார்.
லாரிஜானி கடைசியாக கடந்த வெள்ளிக்கிழமை தெஹ்ரானில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற 'அல்-குத்ஸ் தின' பேரணியில் ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியனுடன் கலந்துகொண்டபோது பகிரங்கமாகக் யுத்தக்களத்தில் செயல்பட்டிருந்தார்.
ஈரானிய அரசியல் படிநிலையில் நீண்டகாலமாக முக்கியப் புள்ளியாக விளங்கும் லாரிஜானி, ஈரானின் அணுசக்தி பேச்சுவார்த்தைகளுக்குத் தலைமை தாங்கியதுடன், ஈரானிய பாராளுமன்றத்தின் சபாநாயகராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் பாதுகாப்பு துணை இராணுவப் பிரிவான 'பசிஜ்' (Basij) பிரிவின் தளபதியும் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் செவ்வாய்க்கிழமை X தளத்தில் தெரிவித்துள்ளது.
"துல்லியமான புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில், தெஹ்ரானின் மையப்பகுதியில் நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில், கடந்த ஆறு ஆண்டுகளாக பசிஜ் பிரிவின் தளபதியாக இருந்த குலாம் ரேசா சுலைமானி (Gholam Reza Soleimani) கொல்லப்பட்டுள்ளார் என அவரின் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
17 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
30 minute ago