Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Mithuna / 2023 டிசெம்பர் 18 , பி.ப. 02:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
உக்ரேன் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்தப் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா ,இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் இராணுவ உதவி, பொருளாதார ரீதியாக உதவிகளை வழங்கி வருகின்றன.
ரஷ்யா தொடர்ந்து உக்ரைன்மீது தாக்குதல் நடத்தி தனது கட்டுப்பாட்டுக்குள் உக்ரேனைக் கொண்டுவர தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதி புட்டின், செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “உக்ரேனில் மொத்தம் 6 லட்சத்து 17 ஆயிரம் படைவீரர்கள் முகாமிட்டுள்ளனர். எனவே மேலும் படைகளை அணிதிரட்ட வேண்டிய அவசியம் இல்லை. எங்களின் இலக்கு நிறைவடையும் வரை உக்ரைன் நாட்டில் அமைதி திரும்பாது” என தெரிவித்தார்.
ஜனாதிபதியாக கடந்த 24 ஆண்டுக்கு மேல் பதவி வகித்துவரும் புட்டின், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடிவுசெய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
33 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
39 minute ago