Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 09, வெள்ளிக்கிழமை
Janu / 2023 ஜூன் 04 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்டாக்ஹோம்
உலகின் பல்வேறு நாடுகளில் உடலுறவு, தன்பாலின ஈர்ப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பொதுவெளியில் பேசுவதற்கும், சினிமாவில் காட்டுவதற்கும் கடுமையான தடைகள் நிலவுகின்றன.
இந்தியாவைப் போன்ற நாடுகளில் தற்போது ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவான சட்டங்கள் நிறைவேறி வரும் நிலையில், இதற்கான எதிர்ப்பு குரல்களும் எழுந்த வண்ணம் இருக்கின்றன.
அதே சமயம் மேற்கத்திய நாடுகள், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் பாலியல் கல்வி குறித்தும், தன்பாலின உறவு குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அதிக முனைப்பு காட்டப்படுகிறது. குறிப்பாக ஜூன் மாதத்தை 'பிரைட் மாதம்' (Pride month) என்ற பெயரில் ஓரினச்சேர்க்கை ஆதரவாளர்கள் கொண்டாடுகின்றனர்.
இதையெல்லாம் தாண்டி ஒரு படி மேலே சென்று, சுவீடனில் தற்போது 'உடலுறவு' என்பது ஒரு விளையாட்டுப் போட்டியாக அங்கிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு 'ஐரோப்பியன் செக்ஸ் சாம்பியன்ஷிப்' என பெயரிடப்பட்டுள்ளது. இதன் மூலம் உடலுறவை ஒரு விளையாட்டாக அங்கிகரித்து, அதற்கு போட்டியும் நடத்தும் முதல் நாடு என்ற பெயரை சுவீடன் பெற்றுள்ளது.
இந்தப் போட்டி வருகிற ஜூன் 8 ஆம் திகதி முதல் நடத்தப்பட உள்ளதாகவும், பல வாரங்கள் இந்த போட்டி நடத்தப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
துணையை கவர்தல், உடல் மசாஜ், வாய்வழி பாலியல், உடலுறவு, சகிப்புத்தன்மை என 16 பிரிவுகளில் போட்டி நடத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த போட்டியை நடத்த 'சுவீடன் செக்ஸ் பெடரேஷன்' ஏற்பாடு செய்துள்ளது. போட்டியில் 70 சதவீதம் வாக்குகளை பார்வையாளர்கள் அளிப்பார்கள் என்றும், நடுவர்கள் 30 சதவீதம் வாக்குகளை அளிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் இருந்து 20 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago