Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Ilango Bharathy / 2022 மே 29 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
நைஜீரியாவில் கிறிஸ்தவ தேவாலயமொன்றில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 31 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்கிழக்கு நகரமான போர்ட் ஹார்கோர்ட்டில் அமைந்துள்ள கிங்ஸ் அசெம்பிளி தேவாலயத்திலேயே நேற்றைய தினம் (28) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவ தினத்தன்று குறித்த தேவாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக அங்கு மக்கள் வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில் அங்கு வழங்கப்பட்ட உணவினைப் பெற்றுக் கொள்வதற்காக ஏராளமான மக்கள் திரண்டுள்ள நிலையில் அங்கு ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் 7 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .