2026 ஜனவரி 14, புதன்கிழமை

உதவி வருகிறது; ஈரானில் ஆர்ப்பாட்டம் செய்ய வலியுறுத்தும் ட்ரம்ப்

Shanmugan Murugavel   / 2026 ஜனவரி 14 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

அண்மைய ஆண்டுகளின் பாரிய ஆர்ப்பாட்டங்களுக்கெதிராக ஈரானின் இஸ்லாமியக் குடியரசு இரும்புக்கரம் கொண்டு அடக்குகையில், தொடர்ந்து ஆர்ப்பாட்டம் செய்யுமாறு ஈரானியர்களை செவ்வாய்க்கிழமை (13) வலியுறுத்திய ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அவர்களை துன்புறுத்துபவர்களின் பெயர்களை ஞாபகம் வைத்திருக்குமாறும் உதவி வந்து கொண்டிருக்கிறது எனக் கூறியுள்ளார்.

தனது ட்ருத் சோஷல் பதிவொன்றில் உங்களது நிறுவகங்களைக் கைப்பற்றுங்களெனத் தெரிவித்த ஐ. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஆர்ப்பாட்டக்காரர்களின் அறிவற்ற கொலைகள் நிறுத்தப்படும் வரையில் ஈரானிய அதிகாரிகளுடன் அனைத்துச் சந்திப்புகளையும் இரத்துச் செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .