Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Freelancer / 2022 மே 26 , பி.ப. 02:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, உணவு, எரிசக்தி மற்றும் உரம் ஆகியவற்றின் விலை உயர்வால் உலகளாவிய மந்த நிலையை ஏற்படுத்தும் என்று உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் புதன்கிழமை அமெரிக்க வணிக நிகழ்வில் தெரிவித்ததாவது,
வப்போகும் நாங்கள் மந்தநிலையை எவ்வாறு தவிர்க்கப்போகின்றோம் என்பதைப் பார்ப்பது கடினம் என்று கூறினார்.
சீனாவில் தொடர்ச்சியான கொரோனா வைரஸ் பூட்டுதல்கள் இந்த மந்தநிலை குறித்த கவலைகளை அதிகரிப்பதாகவும் அவர் கூறினார்.
அவரது கருத்துக்கள், உலகப் பொருளாதாரம் சுருங்கக் கூடும் அபாயம் குறித்து எச்சரிக்கையை தோற்றுவித்துள்ளது.
எரிசக்தி விலைகளை இரட்டிப்பாக்கும் யோசனையே மந்தநிலையைத் தூண்டுவதற்கு போதுமானது என்றும் அவர் கூறினார்.
உலக வங்கி இந்த ஆண்டுக்கான அதன் உலகப் பொருளாதார வளர்ச்சிக் கணிப்பைக் கிட்டத்தட்ட 3.2% ஆகக் குறைத்துள்ளது. (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .