2025 செப்டெம்பர் 02, செவ்வாய்க்கிழமை

உலகிலேயே முதல் தடவையாக 3D அச்சிடப்பட்ட கண்

Ilango Bharathy   / 2021 நவம்பர் 28 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகிலேயே முதன்முறையாக நபர் ஒருவருக்கு  3D தொழிநுட்பத்தில்  அச்சிடப்பட்ட கண் ஒன்று இடது கண்ணாக பொருத்தப்பட்டுள்ள சம்பவம் பிரித்தானியாவில் இடம் பெற்றுள்ளது.

லண்டனின் கிழக்கு பகுதியில் இருக்கும் ஹாக்னியில் வசிக்கும் ஸ்டீவ் வெர்ஸ்( Steve Verze) என்ற 47  வயதான பொறியாளருக்கே கடந்த 25 ஆம் திகதி குறித்த   கண்ணை மூர்ஃபீல்ட்ஸ் ஐ (Moorfields Eye )என்ற வைத்தியசாலையைச் சேர்ந்த மருத்துவர்கள்  பொருத்தியுள்ளனர்.

 இது தொடர்பில் குறித்த வைத்தியசாலை  வெளியிட்டுள்ள அறிக்கையில் ”நோயாளி ஒருவருக்கு முழுவதுமாக தொழில்நுட்ப முறையில் தயாரிக்கப்பட்ட முதல் செயற்கைக் கண் பொருத்தப்பட்டிருக்கிறது.இது முற்றிலும் தொழில்நுட்ப முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது .எனினும்  இக்கண் சாதாரணமாகவே தோற்றமளிக்கிறது. அத்துடன் இது குறைந்த ஆக்கிரமிப்பு (less invasive) கொண்டது. அது மட்டுமல்லாமல் தெளிவான கருவிழியினுடைய உண்மையான ஆழமும் இருக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X