Lenin Raj / 2026 ஏப்ரல் 29 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

நம்மில் பலர் ஒரு சில இரகசியங்களை மட்டுமே பகிரங்கமாக அறிவிப்பது வழமையாகும்.
குறிப்பாக, எமது தாய், தந்தை, மனைவி மற்றும் பிள்ளைகள் குறித்த இரகசியங்களை எமது உயிருக்கு உயிரான நண்பர்களிடம் கூடப் பகிர்ந்து கொள்வதில்லை.
அவ்வளவு ஏன், பிள்ளைகள் செய்யும் சிறு குழப்பங்களைக்கூடத் தாய் தந்தையிடமோ அல்லது தந்தை தாயிடமோ பகிரங்கப்படுத்தத் தயங்குவதுண்டு.
இவ்வாறிருக்க, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது தாயார் தொடர்பில் தெரிவித்துள்ள கருத்து, தற்போது உலக நாடுகளையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அமெரிக்கா - இங்கிலாந்து இடையேயான உறவை வலுப்படுத்தும் நோக்கில், இங்கிலாந்து மன்னர் சார்லஸ் நான்கு நாட்கள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார்.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் மெலனியா ட்ரம்ப் ஆகியோர் மன்னர் சார்லஸ் மற்றும் மகாராணி கமிலாவை நேற்று வெள்ளை மாளிகையில் வரவேற்றனர்.
வெள்ளை மாளிகையில் பிரிட்டன் மன்னர் சார்லஸ் குடும்பத்தினருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரவேற்பு விழாவின்போது பேசிய ட்ரம்ப், “எனது தாயாருக்கு மன்னர் சார்லஸ் மீது ஒரு ஈர்ப்பு இருந்தது. சார்லஸ் இளமைப் பருவத்தில் இருந்தபோது, அவர் மிகவும் அழகாக இருப்பதாக என் தாயார் கூறியது இப்போதும் எனக்கு நினைவிருக்கிறது,” என்று குறிப்பிட்டார்.
ட்ரம்ப்பின் இந்தப் பேச்சு அங்கிருந்தவர்களிடையே பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியதோடு, அவரது இந்த வெளிப்படைத் தன்மையைச் சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டியும் புகழ்ந்தும் கருத்துகளைப் பதிவேற்றி வருகின்றனர்.
2 hours ago
16 May 2026
16 May 2026
16 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
16 May 2026
16 May 2026
16 May 2026