Freelancer / 2022 ஜனவரி 15 , பி.ப. 03:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
டோங்கா நாட்டில் நீருக்கடியில் ராட்சத எரிமலை வெடித்ததை அடுத்து டோங்கா, பிஜி, நியூசிலாந்து உள்ளிட்ட சில நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒரு தேவாலயம் மற்றும் பல வீடுகள் வழியாக அலைகள் செல்வது டோங்காவில் இருந்து வெளியாகிய சமூக ஊடகக் காட்சிகளில் இருந்து தெரியவருகிறது.
இதனையடுத்து, அங்கு வசிப்பவர்கள் உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
எட்டு நிமிட வெடிப்பு மிகவும் வன்முறையாக இருந்தது என்றும் 800 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள பிஜியில் "பலத்த இடி சத்தங்களை" என்று கேட்க முடிந்தது என்று தலைநகர் சுவாவில் உள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.
எரிமலையில் இருந்து கொட்டும் வாயு, புகை மற்றும் சாம்பல் ஆகியவை வானத்தில் 20 கிலோ மீற்றர் தூரத்துக்கு சென்றுள்ளதாக டோங்கா புவியியல் சேவைகள் தெரிவித்துள்ளது.
17 minute ago
25 minute ago
32 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
25 minute ago
32 minute ago
47 minute ago