2024 ஜூலை 27, சனிக்கிழமை

எலான் மஸ்க் பாராட்டி உலகின் கவனத்தை ஈர்த்த தமிழர்

Freelancer   / 2024 ஜூன் 11 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

டெஸ்லா குழுவின் தலைவராக உயர்ந்திருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அசோக் எல்லுசாமியை எலான் மஸ்க் பாராட்டியுள்ளார்.

உலகில் மின்சார கார் உற்பத்தியில், முன்னணி இருக்கும் நிறுவனங்களில் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனம், தன்னுடைய அடுத்தகட்டமாக ஓட்டுநர் இல்லாத, கணினி மூலம், அதாவது ஏ.ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் தானியங்கி முறையில் ஓடும் மின்சார கார்களையும் தயாரித்து வருகிறது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் ஆட்டோ பைலர் கார் தயாரிப்பு பிரிவின் தலைவரும் தமிழருமான அசோக் எல்லுசாமி, சமீபத்தில் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றைப் பகிர்ந்திருந்தார். அதில், ”2014இல் ஆட்டோ பைலட் கார் தயாரிப்பு திட்டம் மிக எளிய முறையில், 384 கே.பி மெமரி கொண்ட சிறிய கம்ப்யூட்டரை கொண்டு தொடங்கப்பட்டது. மேலும், சாத்தியமே இல்லை என்று கருதப்பட்ட விடயங்களையும், செய்துகாட்ட, எலான் மஸ்க் தொடர்ந்து தங்களின் குழுவினருக்கு ஊக்கம் அளித்து, முழு சுதந்திரம் அளித்தார்” என அதில் பதிவிட்டிருந்தார்.

இந்தப் பதிவைப் பகிர்ந்திருக்கும் எலான் மஸ்க், ”அசோக் மற்றும் அவரின் குழுவினர் இல்லாவிட்டால், டெஸ்லா நிறுவனம் மற்றவர்களைப் போல் மிகச் சாதாரண கார் நிறுவனமாக தான் இருந்திருக்கும்” எனப் புகழ்ந்துள்ளார். இதன்மூலம் ஒரேநாளில் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார், தமிழரான அசோக் எல்லுசாமி.

2015ஆம் ஆண்டு டெஸ்லா போட்ட ட்விட்டர் பதிவை தொடர்ந்து டெஸ்லா நிறுவனத்தின் ஆட்டோ குழுவில் இணைந்த முதல் நபர் அசோக் எல்லுச்சாமிதான் என எலான் மஸ்க்கே ஒருமுறை தெரிவித்திருந்த நிலையில், படிப்படியாக உயர்ந்து தற்போது அந்தக் குழுவின் தலைவராக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.S


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .