Editorial / 2018 மே 30 , மு.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரானுடனும் வெனிசுவேலாவுடனும் வர்த்தகத் தொடர்புகளைப் பேணினால், தடை விதிக்கப்படும் என்ற ஐக்கிய அமெரிக்காவின் எச்சரிக்கைக்கு மத்தியிலும், இரு நாடுகளுடனும் வர்த்தகத்தை மேற்கொள்ளவுள்ளதாக, இந்தியா அறிவித்துள்ளது. இது, ஐ.அமெரிக்காவோடு நேரடியான மோதல் போக்கை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
நேற்று முன்தினம் (28) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பொன்றில், ஈரானுக்கும் வெனிசுவேலாவுக்கும் எதிரான ஐ.அமெரிக்காவின் நடவடிக்கைகள், இந்தியாவைப் பாதிக்குமா என, இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் கேட்கப்பட்ட போது, அழுத்தங்களின் கீழ், தனது வெளிநாட்டுக் கொள்கையை இந்தியா முன்னெடுக்காது என, அவர் நேரடியாகப் பதிலளித்தார்.
ஈரானுக்கும் வல்லரசு நாடுகளுக்கும் இடையிலான அணுவாயுத ஒப்பந்தத்திலிருந்து, இம்மாதத்தில் வெளியேறியிருந்த ஐ.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீதான தடைகளையும் மீளக் கொண்டுவந்திருந்தார். அதேபோல், வெனிசுவேலாவில் இம்மாதம் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து, வெனிசுவேலா மீதான தடைகளையும், ஐ.அமெரிக்கா நெருக்கியுள்ளது.
இவ்விரு நாடுகளுடனும் வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டிருக்கும் நிறுவனங்கள் மீது தடை விதிக்கப்படுமென, ஐ.அமெரிக்கா ஏற்கெனவே எச்சரித்துள்ளது.
இரு நாடுகளும், ஈரானுக்கான முக்கியமாமன எண்ணெய் விநியோகிஸ்தர்கள் என்ற அடிப்படையில், இவர்களுடனான தொடர்புகளைக் கைவிடப் போவதில்லை என, இந்தியா தெரிவிக்கிறது.
பதிலுக்குப் பதில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பில், இந்தியா கருத்திலெடுக்கப் போவதில்லை எனத் தெரிவித்த அவர், ஐக்கிய நாடுகளால் விதிக்கப்படும் தடைகள் தொடர்பில் தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாகவும், ஆனால் தனித்தனியே நாடுகளால் விதிக்கப்படும் தடைகளை நம்புவதில்லை எனவும் குறிப்பிட்டார்.
33 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
1 hours ago
2 hours ago