2025 ஒக்டோபர் 14, செவ்வாய்க்கிழமை

ஐ. இராச்சியத்தில் களவாடப்பட்ட 40,000 அலைபேசிகள் சீனாவுக்கு

Shanmugan Murugavel   / 2025 ஒக்டோபர் 08 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய இராச்சியத்தில் களவாடப்பட்ட 40,000 செல்லிடத்தொலைபேசிகளை சீனாவுக்கு கடந்தாண்டு கடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் சர்வதேசக் கும்பலொன்றை இல்லாமல் செய்துள்ளதாக மெற்றோபொலிட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய இராச்சியத்தின் மிகப் பெரிய அலைபேசி திருட்டுகளுக்கெதிரான நடவடிக்கையில் 18 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாகவும், 2,000க்கும் அதிகமான களவாடப்பட்ட சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இக்கும்பலே இலண்டனில் களவாடப்பட்ட அலைபேசிகளில் அரைவாசியை ஏற்றுமதி செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட நபரொருவர் கடந்தாண்டு களவாடப்பட்ட அலைபேசியை தேடிச் சென்ற நிலையிலேயே இந்த விசாரணை ஆரம்பித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X