Editorial / 2018 ஜூன் 08 , மு.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
மியான்மாரைச் சேர்ந்த றோகிஞ்சா முஸ்லிம் அகதிகளின் பிரச்சினை தொடர்பாக, ஐக்கிய நாடுகளும் மியான்மாரும், ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளன. இவ்வொப்பந்தம், நேற்று முன்தினம் கைச்சாத்திடப்பட்டது என்பதை, ஐ.நா தகவல்கள் உறுதிப்படுத்திய போதிலும், இவ்வொப்பந்தம் காரணமாக, றோகிஞ்சா அகதிகளின் பிரச்சினைக்கான தீர்வு, எவ்வாறு பெறப்படுமென்பது தெளிவில்லாமலேயே உள்ளது.
மியான்மாரின் ராக்கைன் மாநிலத்தில், றோகிஞ்சா அகதிகள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளைத் தொடர்ந்து, சுமார் 700,000 றோகிஞ்சாக்கள், பங்களாதேஷுக்கு இடம்பெயர்ந்திருந்தனர்.
அவர்களை, ராக்கைனில் மீண்டும் குடியமர்த்துவதற்கான ஒப்பந்தம், மியான்மாருக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட போதிலும், அது இன்னமும் சாத்தியப்படவில்லை.
இந்நிலையிலேயே, இவ்விடயம் தொடர்பில் ஐ.நாவும் மியான்மாரும் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளன. கடந்த சில மாதங்களாக வரையப்பட்டு வந்த இவ்வொப்பந்தத்தின் விளைவாக, ராக்கைன் மாநிலத்தில் உள்ள இடங்களுக்குச் செல்வதற்கு, ஐ.நாவுக்கு அனுமதி வழங்கப்படுகிறது என அறிவிக்கப்படுகிறது.
அதேபோல், அவ்வொப்பந்தத்திலுள்ள ஏனைய விடயங்கள் தொடர்பாகத் தெளிவான தகவல்கள் வெளியிடப்படாத போதிலும், இவ்வொப்பந்தத்தின் படி மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், உடனடியாக ஆரம்பிக்கப்படுமென, ஐ.நா அறிவித்துள்ளது.
ஆனால், பெருந்தொகையில் மக்கள், மியான்மாருக்கு மீண்டும் குடியமர்த்தப்படுவதற்கான அனுப்பப்படுவதற்கு, இன்னமும் அதிக காலம் எடுக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
37 minute ago
58 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
58 minute ago
9 hours ago