Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Freelancer / 2023 செப்டெம்பர் 14 , பி.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல அமெரிக்க பன்னாட்டு சொக்கலெட் தயாரிப்பு நிறுவனமான ஹெர்ஷே நிறுவனத்தால் நடத்தப்படுவது ஆம்ப்ளிஃபை ஸ்னாக் பிராண்ட்ஸ் (Amplify Snack Brands) சிப்ஸ் மற்றும் பாப்கார்ன் வகை உணவு பொருட்களை விற்பனை செய்வதில் முன்னணியில் உள்ளது.
இந்நிறுவனம் "பக்வி ஒன் சிப் சேலஞ்ச்" (Paqui One Chip Challenge) எனும் பெயரில் ஒரு போட்டியை நடத்தி வருகிறது. பெரியவர்களுக்கும், நல்ல உடல்நிலையும் ஆரோக்கியமும் உள்ளவர்கள் மட்டுமே இந்த போட்டியில் பங்கு பெற அந்நிறுவனம் வலியுறுத்தியிருந்தது.
இந்த போட்டியில், அந்நிறுவனம் தயாரிக்கும் கரோலினா ரீபர் மற்றும் நாகா வைபர் எனும் காரமான ஒரே ஒரு சிப்ஸை உண்டு எவ்வளவு நேரம் ஏதும் குடிக்காமலும், உண்ணாமலும் இருக்க முடியும் என்பது கணக்கெடுக்கப்பட்டு வெற்றி பெற்றவர் அறிவிக்கப்படுவர்
இந் நிலையில் அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநிலத்தை சேர்ந்த ஹாரிஸ் வோலோபா எனும் 14-வயது சிறுவன் இப்போட்டியில் தானாக பங்கு பெற விரும்பி இதனை இணையதளம் வழியாக பதிவு செய்து ஆர்வத்துடன் அதை உண்டு பாடசாலைக்குச் சென்றுள்ளான்.
அப்போது கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு பாடசாலையில் உள்ள செவிலியர் ஒருவரை அவன் தொடர்பு கொண்டதும், அவர் அவனை பரிசோதித்து முதலுதவி அளித்து வீட்டிற்கு அனுப்பியுள்ளார். வீட்டிற்கு வந்த சிறுவன் சிறிது நேரத்தில் நினைவிழந்து உயிரிழந்துள்ளான்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
1 hours ago